அதிரடியாக நீக்கப்பட்ட இந்தியர்கள்! ட்விட்டர் வாங்கிய கையோடு எலான் மஸ்க் செய்த முதல் வேலை! - Seithipunal
Seithipunal


டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவன தலைவரும் உலகின் முதல் பணக்காரருமான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை சுமார் ரூ.3.5 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்தார். இதனை அடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தன. பின்னர் தனது முடிவில் இருந்து பின் வாங்கியதால் அவர் மீது ஒப்பந்தத்தை தட்டிக் கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் ஒப்பந்தத்தை இறுதிச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து நேற்று ஒப்பந்தம் முடிந்ததாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்தார். 

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் ஒப்பந்தம் கையெழுத்தானதும் அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளார். குறிப்பாக இந்திய வம்சா வழியைச் சேர்ந்த சிஇஓ பாரக் அகர்வால், தலைமை நீதி அதிகாரி நெட் செகல், ட்விட்டர் சட்டம் மற்றும் கொள்கை நிர்வாகி விஜய் காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில் "ட்விட்டர் நிறுவனம் மீதான எனது ஆர்வம் பணம் சம்பாதிப்பது இல்லை. மனித குலத்திற்கு உதவுவதற்காக சமூக ஊடக தளமான ட்விட்டரை வாங்கியுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elon Moss fired Twitter executives


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->