எலான் மஸ்க் மீண்டும் தந்தையானார்.. 14-வது குழந்தை பிறந்தது! - Seithipunal
Seithipunal


14-வது குழந்தைக்கு எலான் மஸ்க் தந்தையாகி உள்ளார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஷிவோன் ஷில்லீஸ் தெரிவித்துள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசாங்க திறன் துறை தலைவராக உள்ளார்.  கடந்த 2000-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனை எலான் மஸ்க் திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர்களின் முதல் குழந்தை 10 வாரங்களிலேயே உயிரிழந்தது.

இதையடுத்து அதன்பின் இத்தம்பதிக்கு 5 குழந்தைகள் பிறந்தன. அதனை தொடர்ந்து எலான் மஸ்க்   பிரபல நடிகை ரிலேவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் எலான் மஸ்க் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதன்பின் பாடகி கிரீம்சை திருமணம் செய்த எலான் மஸ்க், அவருடன் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.அதனை தொடர்ந்து  3 மனைவிகளையும் பிரிந்த அவர், ஷிவோன் ஷில்லீஸ் என்பவரை திருமணம் செய்து அவர் மூலம் 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.

இதற்கிடையே சமீபத்தில் பெண் எழுத்தாளரான ஆஷ்லே செயின்ட் கிளேர் தனக்கு பிறந்த குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று தெரிவித்தார். இந்த நிலையில் 14-வது குழந்தைக்கு எலான் மஸ்க் தந்தையாகி உள்ளார் என்றும் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஷிவோன் ஷில்லீஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் எங்கள் அற்புதமான மற்றும் நம்பமுடியாத மகன் செல்டன் லைகர்கஸைப் பற்றி நேரடியாகப் பகிர்ந்து கொள்வது நல்லது என்று நாங்கள் உணர்ந்தோம் என கூறியுள்ளார்.மேலும்  அவரை மிகவும் நேசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு எலான் மஸ்க் இதய வடிவசின்னத்தைபதிவிட்டுள்ளார்என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் எலான் மஸ்க்-ஷிவோன் ஷில்லீஸ் தம்பதிக்கு 4-வது குழந்தை எப்போது பிறந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elon Musk becomes father again. The 14th child is born!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->