டிரம்ப் மீது துப்பாக்கி சூடு.. உளவுத்துறை அதிகாரி பதவி விலக வேண்டும் - எலான் மஸ்க் கண்டனம்.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் இன்னும் சில மாதங்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார். இந்தத் தேர்தலை முன்னிட்டு பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பேசினார்.

அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்ப்பை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், பெரும் பணக்காரரான எலான் மஸ்க், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, டொனால்டு டிரம்பிற்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன். அவர் உடனடியாக உடல் நலம் தேற வேண்டும். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுத்துறையின் தலைவரும், இந்த கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டவரும் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elon musk condems gun shoot to donald trumph


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->