மொபைல் செயலியில் பண மோசடி- ரூ. 51 கோடி முடக்கம்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 'எம்பிஎப்' என்ற செல்போன் செயலிக்கு பின்னணியில் செயல்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது மேகாலயா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த மொபைல் செயலியில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும் என்று ஆசைகாட்டி, மோசடி கும்பல் ஒன்று ஏராளமானோரை கவர்ந்தது. அதன்படி, அனைவரும் பணத்தை செலுத்திய பின்னர், அந்த கும்பல் மொபைல் செயலியை செயலிழக்கச் செய்து விட்டு, கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் தப்பி ஓடி விட்டது. 

இந்த செயலியில் நடைபெற்ற சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து, பின்னர் நொய்டா, புனே, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொண்டது. 

இதைத்தொடர்ந்து, 'எம்பிஎப்' செயலியுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.51 கோடியே 11 லட்சத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement Department freeze fifty one crores money for mobile app money fraud


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->