வண்டலூர் பூங்காவில் அதிரடியாக உயர்ந்த நுழைவுக் கட்டணம்.!
entry fees increase in vandalur zoo
வண்டலூர் பூங்காவில் அதிரடியாக உயர்ந்த நுழைவுக் கட்டணம்.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் இரண்டாயிரத்திற்கும் மேலாக விலங்குகள், பறவைகள் வாழ்கின்றனர்.
இந்த விலங்குகள் மற்றும் பறவைகளின் செயல்பாடுகளை கண்காணிப்பு கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த விலங்குகள் மற்றும் பறவைகளை பொதுமக்கள் சென்று பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.
அதன் படி பெரியவர்களுக்கு ரூ. கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ. கட்டணமாகவும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது வண்டலூர் பூங்காவில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது, பேட்டரி வாகனக் கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.150-ஆகவும், சஃபாரி வாகனத்திற்கு ரூ.50ல் இருந்து ரூ.150ஆகவும், வீடியோ ஒளிப்பதிவுக்கான கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.750-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள், ஐந்து வயதுக்கு உட்பட்டோருக்கு இலவச நுழைவுக் கட்டணம் தொடர்வதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது.
English Summary
entry fees increase in vandalur zoo