ஹிஜாப் அணியாமல் ஹோட்டலுக்கு சென்ற பெண்களுக்கு நேர்ந்த சம்பவம்..! - Seithipunal
Seithipunal


ஈரான் நாட்டில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தொன்யா என்ற பெண்ணும், மற்றொரு பெண்ணும் ஹிஜாப் அணியாமல் காலை சிற்றுண்டி சாப்பிட்டு உள்ள புகைப்படம் ஒன்று ஆன்லைனில் வெளியானது. ஈரானில் உள்ள கபே மற்றும் காபி கடைகளில் பெருமளவில் ஆண்களே வாடிக்கையாளராக செல்வதுண்டு. 

இதுகுறித்து, தொன்யாவின் சகோதரி தெரிவிக்கும்போது, பாதுகாப்பு அதிகாரிகள் தொன்யாவை நெருங்கி, ஹிஜாப் அணியாததற்கு விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு தொன்யாவிடம் இருந்து சரியான பதில் வராத நிலையில், தொன்யாவை பாதுகாப்பு படையினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். 

பின்னர் தொன்யாவை பாதுகாப்பு படையினர் எவின் சிறையில் அறை எண் 209-ல் அடைத்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த எவின் சிறையானது அரசியில் கைதிகள் அடைக்கப்படும், கொடூர மற்றும் குறைவான வசதிகளை கொண்டது. ஈரானின் உளவு அமைச்சகத்தினரால் நிர்வகிக்கப்படும் கைதிகளுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஈரானில் பிரபலம் வாய்ந்த பலரை பாதுகாப்பு படையினர் கைது செய்து வருகின்றனர். அதில் கவிஞர் மோனா போர்ஜோயி, ஈரான் கால்பந்து வீரர் உசைன் மகினி, முன்னாள் ஈரான் அதிபர் அலி அக்பரின் மகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நபர்கள் ஆவர். இந்த வாரம் பிரபல ஈரானிய பாடகி ஷெர்வின் ஹாஜிபுர் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

ஈரான் நாட்டில் 22 வயதுடைய மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்ற காரணத்தால் கைது செய்யப்பட்ட அவரை கடந்த 13-ந்தேதி போலீசார் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இதனை கண்டிக்கும் வகையில் ஈரானில் பல பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 
அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கி மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தது. 

மேலும் இந்த போராட்டத்தில் ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை தடுக்கும் வகையில், ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதையடுத்து ஈரான் நாட்டில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்கைப், பேஸ்புக், டுவிட்டர், டிக்-டாக் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்ட நிலையில், இணையதள சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், சீர்திருத்த ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரண்டு வாரமாக நீடிக்கும் இந்த போராட்டத்தில் குறைந்தது 83 பேர் இறந்துள்ளனர், அதில் பெரும்பாலான போராட்டக்காரர்கள் என்றும், அந்தப் போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்றும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eran woman arrested for not wear hijap


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->