உக்ரைனில் ரஷ்ய போர் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் - ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை - Seithipunal
Seithipunal


அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ராணுவ கூட்டமைப்பான நேட்டாவில் இணைவதற்கு உக்ரைன் விரும்பிய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது.

தற்பொழுது ஒன்பது மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் உக்ரைன் போரில் ரஷ்யாவின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வொண்டொ் லெயென் தெரிவித்ததாவது,

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமித்த பகுதிகளில் ரஷ்ய படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யாவின் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். இந்த நீதிமன்றம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் இணைந்து விசாரணை நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் 60,000 மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று உர்சுலா வான் டெர் லெயென் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EU recommends special court to investigate Russia war crimes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->