உக்ரைனுக்கு பீரங்கிகள் வழங்கும் விவகாரம்: ஐரோப்பிய நாடுகளின் பேச்சு வார்த்தை தோல்வி.! - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரின் தொடக்கத்திலிருந்தே ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் மற்றும் ராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

மேலும் ரஷ்யாவுக்கு எதிராக போரிட சக்திவாய்ந்த பீரங்கிகளை மேற்கத்திய நாடுகள் அளித்து உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த பீரங்கிகளை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை ஜொ்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமான தளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஜொ்மனியின் சக்திவாய்ந்த பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பீரங்கிகள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டால் போரில் உக்ரைனின் கை ஓங்கும் என கருதப்பட்டது. உக்ரைனின் கோரிக்கைக்காக பல ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனியிடம் லியோபாா்ட் 2 பீரங்கிகளை வழங்குமாறு வலியுறுத்தின. 

ஆனால் உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதில் எச்சரிக்கையாக செயல்படும் ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷால்ஸ், பேச்சுவார்த்தையின் பொழுது லியோபாா்ட் 2 பீரங்களை உக்ரைனுக்கு அனுப்ப தயக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் நீண்ட நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்து நிறைவடைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EU talk fails in Ukraine tank issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->