மெட்டா நிறுவனத்திற்கு அபராதம் - ஐரோப்பிய ஆணையம் அதிரடி..!
European Commission fine to metta company
கடந்த 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் பேஸ்புக் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். தற்போது இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக முன்னணியில் உள்ளது.
ஆனால், பேஸ்புக் மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவையுடன் இயங்கி வருகின்றன. இதனை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில், 'பேஸ்புக்' சமூக வலைத்தளத்தை நடத்தி வரும் 'மெட்டா' நிறுவனம் போட்டியாளர்களை ஒடுக்கும் விதமாக முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரசல்ஸ் நாடு புகார் தெரிவித்தது. இந்த புகார் குறித்து 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தது.
அதன் இறுதியில், மெட்டா நிறுவனத்துக்கு சுமார் 80 கோடி யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.7 ஆயிரத்து 120 கோடி அபராதம் விதித்துள்ளது. ஆனால், போட்டியாளர்களும், வாடிக்கையாளர்களும் எந்த வகையில் பாதிக்கப்பட்டனர் என்பது நிரூபிக்கப்படவில்லை என்று கூறிய மெட்டா நிறுவனம், மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தது.
English Summary
European Commission fine to metta company