கோர விபத்தில் பிரபல நடிகை.. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபல நடிகை கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த கார் தீப்பிடித்து எரிந்ததில் அவருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து கடந்த வாரம் நடைபெற்றது. அன்னே ஹெச் என்ற 53 வயது நடிகையான இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகின்றார்.

முக்கிய திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் தனது காரில் லாஸ்ஏஞ்சல்ஸின் புறநகர் பகுதிக்கு சென்றபோது சாலையிலிருந்து விலகி அடுக்குமாடி குடியிருப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது கார் தீப்பிடித்து எரிந்ததில் நடிகைக்கு பயங்கர காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அவரது முதுகு பகுதியில் அதிக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

விபத்தில் காயம் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் மூழ்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actress In Los Angeles accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->