CAL AI செயலியை உருவாக்கிய 18 வயது CEO-வுக்கு NO சொன்ன பிரபல பல்கலைக்கழகங்கள்..? - Seithipunal
Seithipunal


CAL AI என்ற கலோரி கண்காணிப்பு செயலியை உருவாக்கிய CAL AI அமரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாக் யாதேகரி 18 வயது. பள்ளியில் படிக்கும்போதே இந்நிறுவனத்தை அவர் உருவாக்கினார். இந்த நிறுவனத்தின்  சொத்து மதிப்பு 30 மில்லியன் டாலர்கள்.

CAL AI செயலி மூலம் சாப்பிடும் உணவை ஸ்கேன் செய்தால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அந்த உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை காண்பிக்கும். 

சாக் யாதேகரி இளம் வயதில் உயரிய பொறுப்பு மற்றும் மில்லியனர் ஆகவும் உள்ளார். இவர் மாதத்திற்கு 02 மில்லியன் டாலர் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தான் படிக்க விரும்பி தன்னுடைய விண்ணப்பத்தை பிரபல பல்கலைக்கழகங்கள் அனுப்பியுள்ளார். ஆனால், குறித்த பல்கலைக்கழகங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக சாக் யதேகரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், யேல், கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக சாக் யதேகரி குறிப்பிட்டுள்ளார்.

இளம் வயதிலேயே இத்தனை திறமையாக உருவெடுத்த இவரை அப்பல்கலைக்கழகங்கள் எப்படி நிராகரிந்தன என்பது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களையம், அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர். சாக் யதேகரியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமை  "அது முட்டாள்தனம்," என்று ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன், சாக்கின் எக்ஸ் பதிவிற்கு பதிலளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous universities that said NO to the 18 year old CEO who created the CAL AI app


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->