தற்கொலை செய்ய முயன்ற தந்தையை தடுத்து நிறுத்திய மகள்.!! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தற்கொலை செய்ய முயன்ற தந்தையை தடுத்து நிறுத்திய மகள்.!! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூரம்.!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது இக்பால். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இக்பாலுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இக்பால் தற்கொலை செய்து கொள்வதற்காக பெரிய கத்தியுடன் சென்றுள்ளார். இதைப்பார்த்த அவரது மகள், அவரைத் தடுத்து தற்கொலை செய்ய வேண்டாம் என்று கெஞ்சியுள்ளார்.

ஆனால், இக்பால் அதனை பொருட்படுத்தாமல் சென்றுள்ளார். தந்தையை தற்கொலை செய்ய விடாமல் தடுப்பதற்காக, அந்த சிறுமியும் இக்பாலுடன் சென்றுள்ளார். இதையடுத்து இக்பால் சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்து மிட்டாய் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு அவரது மகள்  மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இக்பால் மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரை விறகுக் கொட்டகையில் வீசிவிட்டு, சிறிது நேரம் கழித்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி, குழந்தை எங்கே என்று கேட்டதற்கு, இக்பால் தெரியாது; தன்னுடன் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இக்பால் தனது மகளை அழைத்துச் சென்றதை அப்பகுதியில் உள்ள அனைவரும் பார்த்துள்ளனர். இதை அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். அதன் பின்னர் போலீசார் இக்பாலை பிடித்து விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் இக்பால் தெரிவித்ததாவது, "தற்கொலை செய்துகொள்ள முயன்ற என்னை மகள் தடுத்ததால் ஆத்திரத்தில் மகளைக் கழுத்தை நெரித்து கொன்றதுடன் கழுத்தை அறுத்துக் கொன்றதாக தெரிவித்தார். மேலும், மகளைக் கொன்ற பின், தற்கொலை செய்ய மனசு வரவில்லை. 

அதனால் வீட்டிற்கு வந்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தச் சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father kill daughter for stop sucide in jammu kashmeer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->