ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூட வேண்டும்! தலிபான் அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பெண் செய்தியாளர்கள் முகத்தை மூடி செய்தி வாசிக்க வேண்டும் என்று தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து தனது கடுமையான ஷரியா சட்டத்தின் மூலம் ஆட்சி செய்து வருகிறது.

இதனால் திரையரங்குகள், கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் செயலிகள் டிக் டாக் மற்றும் பப்ஜி ஆகியவற்றிற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஷரியா சட்டத்தின் கீழ் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, வெளியே செல்லுதல் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடு விதித்த நிலையில் பெண் சுதந்திரம் முற்றிலுமாக மறுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க கூடாது என்றும், அரசு வேலைகளில் பணிபுரிவோர் கண்டிப்பாக பர்தா அணிய வேண்டும் இல்லையென்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கட்டுப்பாடுகளை விதித்தது.

இதை தொடர்ந்து ஆப்கானில் தொலைக்காட்சியில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் செய்திகளை வாசிக்கும் போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்று தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா காலங்களில் பயன்படுத்தியதை போன்ற முக கவசங்களை அணியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Female TV present should cover face


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->