கென்யாவில் தீ விபத்து! 17 மாணவர்கள் பலி! - Seithipunal
Seithipunal


கென்யா நாட்டில் நெய்ரி மாகாணத்தில் உள்ள ஹில்சைட் எண்டர்சா என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். மேலும், இங்குள்ள பல மாணவர்கள் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இதற்கிடையில், நேற்று இரவு பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியில்  திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் உடல் கருகி பரிதாபமாக17 மாணவர்கள் பலியானார். மேலும், 13 பேருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்துக்குள்ளான இடத்திற்கு விரைந்து சென்று அங்கு தீ பற்றி எரிந்துகொண்டு இருந்த விடுதியில் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்ட மாணவர்களை மீட்டு தீயணைப்புத் துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது எனபதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire in Kenya 17 students killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->