அமெரிக்கா : தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க அனுமதி.!   - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர். 

அதே நேரம், வெளிநாடு வாழ் இந்தியர்களும் தாங்கள் வாழும் அந்தந்த நாடுகளில் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டே தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டிய நிலை உள்ளது. அந்த வகையில், ஒருசில நாடுகளில் தீபாவளி பண்டிகையின் போது இந்தியர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. 

இந்த நிலையில் அமெரிக்கா நாட்டில் உள்ள உட்டா மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு பொதுவிடுமுறை மற்றும் பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கும் மசோதா மாகாண சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து, அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், உறுப்பினர்கள் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. 

இதைத்தொடர்ந்து, தீபாவளி காலத்தில் ஐந்து நாட்களுக்கு பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் அனுமதி அளிக்கப்படும். அதேபோல், மாகாண பொதுவிடுமுறை பட்டியலுக்குள் தீபாவளி பண்டிகை கொண்டுவரப்படும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Firecrackers are allowed on Diwali festival in USA


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->