நிலவுக்கு சென்ற முதல் அமெரிக்க விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் காலமானார்.! - Seithipunal
Seithipunal


உலகில் உள்ள மனிதர்களில் பலர் எவ்வளவோ சாதனைகளை படைத்திருந்தாலும், மிகப்பெரிய சாதனை என்றால் அது நிலவிற்கு மனிதன் சென்றது தான். இந்த சாதனையை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 'அப்பல்லோ' படைத்து காட்டியது.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியாக நாசா பல்வேறு சோதனையை பல முறை நடத்தியது. அதன் பின்னர் கடந்த 1968-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி நாசா முதல் முறையாக 'அப்பல்லோ 7' என்ற விண்கலத்தில் மனிதர்களை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியது. 

அதில், டான் எப் ஐசெல், வால்டர் எம். ஷிரா மற்றும் வால்டர் கன்னிங்ஹாம் உள்ளிட்ட மூன்று விண்வெளி வீரர்கள் 'அப்பல்லோ 7' விண்கலத்தில் 11 நாட்கள் விண்வெளியை சுற்றி வந்தனர். 

அத்துடன், அவர்கள் தங்கள் விண்வெளி பயணத்தை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பவும் செய்தனர். இதையடுத்து அவர்கள் மூவரும் அக்டோபர் மாதம் 22-ந் தேதி அதே விண்கலத்தில் பூமிக்கு திரும்பினர். 

இதன் மூலம் அவர்கள் மூன்று பேரும் விண்வெளி சென்று திரும்பிய முதல் அமெரிக்க விண்வெளி வீரர்கள் என்ற பெருமையை பெற்றனர். விண்வெளி வீரர்களான இவர்களில் டான் எப் ஐசெல், வால்டர் எம். ஷிரா உள்ளிட்ட இருவரும் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், வால்டர் கன்னிங்ஹாம் மட்டும் உயிருடன் இருந்து வந்தார். 

இந்நிலையில் இவரும் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். 90 வயதுடைய கன்னிங்ஹாம், அமெரிக்கக் கடற்படையிலும் சிறப்புப் படையிலும் விமானியாக பணியாற்றி, ஓய்வு பெறுவதற்கு முன்பு போர் விமானியாக 54 பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு அவர் கடந்த 1963-ம் ஆண்டு  நாசாவின் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first american astronaut in space of waltar cunningham passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->