கனமழையால் பிலிப்பைன்சில் வெள்ளப்பெருக்கு - 29 பேர் பலி - Seithipunal
Seithipunal


தென் கிழக்கு நாடான பிலிப்பைன்ஸில் கிறிஸ்துமஸ் தினத்தன்று இடைவிடாமல் கொட்டிய கனமழையால் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களான மிண்டனாவோ, பிகோல், விசயாஸ் மற்றும் ஜாம்போங்கா நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நகரங்களின் தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 12க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்தடை மற்றும் அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றனர். இதுவரை பேரிடர் மீட்பு குழுவினர்களால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பிலிப்பைன்ஸில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood ravages Philippines killes 29 people


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->