ரஷ்யா உக்ரைன் போரால் ஆப்பிரிக்கா நாடுகளில் உணவுப்பஞ்சம்! ஐநா பொதுச் செயலாளர்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா உக்ரைன் போரால் ஆப்பிரிக்காவில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே  போர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனால் இவ்விரு நாடுகளும் பல்வேறு பொருளாதார இழப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது.

உக்ரைனின் கருங்கடல் உள்ளிட்ட துறைமுகத்தை ரஷ்யா கைப்பற்றியதால் அந்நாட்டின் உணவு ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருகிறது.

இதனையடுத்து ஏற்றுமதி தடைபட்டதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக ரஷ்யாவுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Food famine in Africa due to Russia Ukraine war


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->