கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்..!! உலகம் முழுவதும் ரசிகர்கள் சோகம்..!! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் மூன்று முறை உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றுள்ளார். குறிப்பாக 1958, 1962, 1970 என மூன்று உலக கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி பிரேசில் அணிக்கு உலக கோப்பை பெற்று தந்துள்ளார். இவர் பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார்.

கால்பந்தாட்ட வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 1363 போட்டிகளில் விளையாடி 1281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரகத்தில் இருந்த கற்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்த போது பெருங்குடலின் வலது பக்கத்தில் புற்றுநோய் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

உடனடியாக அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. பிறகு பீலேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக மீண்டும் சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று குணமடைந்தாலும் அவருக்கு செய்யப்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா தொற்றுக்கு பிந்திய பாதிப்புகளால் அவதிப்பட்டு அந்த பிலே மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். பீலேவின் இறப்பிற்கு உலக தலைவர்களும், கால்பந்தாட்ட வீரர்களும், பலதரப்பட்ட மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Brazilian footballer Pele has passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->