கொட்டித் தீர்க்கும் கனமழை - சோமாலியா, கென்யாவில் 40 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியா நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் வறட்சி ஏற்பட்டு இருந்த நிலையில், தற்போது அங்குள்ள ஜூபாலாந்து மாகாணத்தில் கனமழை பெய்ததுடன் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி சுமார் இருபத்தைந்து பேர் பலியாகினர். பல வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன. 

இதனால், வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிறப்பித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் அண்டை நாடான கென்யா, எத்தியோப்பியாவிலும் கனமழை பெய்ததனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளபெருக்கில் பதினைந்து பேர் உயிரிழந்தனர். அங்கேயும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தீவிர மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

துறைமுக நகரமான மொம்பாசா மற்றும் வடகிழக்கு மாவட்டங்களான மன்டேரா மற்றும் வஜிர் உள்ளிட்டவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திடீர் வெள்ளம் 241 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்துள்ளது என்றும் 1,067 கால்நடைகளை கொன்றது என்றும் கென்யா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

கென்யாவின், வானிலை முன்னறிவிப்பாளர்கள் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான குறுகிய மழைக்காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்யும் என்று எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

forty peoples died for floods in somalia and kenya


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->