அமெரிக்காவில் கடும் பனி : 3 ஆயிரம் விமானம் ரத்து - ஆயிரம் விமானம் தாமதம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இந்த பனிப்பொழிவு காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இந்தப் பனிபொழிவால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் அதிக விபத்துகளும் நடைபெறுகின்றது. இதுமட்டுமல்லாமல், ரெயில் மற்றும் விமான சேவைகளிலும் பாதிப்பு ஏற்படுகின்றன.
 

அந்தவகையில், அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக நேற்று சுமார் நான்கு ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்களின் புறப்படும் நேரம் தாமதமாகியுள்ளது. 

இதுவரை மொத்தம் மூன்று ஆயிரத்து 315 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் ஆயிரத்து 400 விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பனிப்பொழிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் விமான போக்குவரத்து சேவை மேலும் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four thousand flights cancel due to heavy snow fall


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->