ரஷ்யா-உக்ரைன் போருக்கு இந்தியாவால் தீர்வு காண முடியும் - பிரான்ஸ் அதிபர் நம்பிக்கை - Seithipunal
Seithipunal


விமான போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், பிரான்ஸின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 ஏர் பஸ் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்காக இந்திய பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் காணொலிக் காட்சி மூலம் பேசினார்கள்.

அப்பொழுது பிரான்ஸ் அதிபா், உக்ரைன் ரஷ்யா இடையேயான போருக்கு தீர்வு காண மோடி தலைமையிலான இந்தியாவால் உலக நாடுகளை அணி திரட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஓராண்டாக நடைபெற்று வரும் உக்ரைன் போருக்கு இந்தியாவால் நிச்சயம் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்கள் வாங்குவது இந்தியா, பிரான்ஸ் இடையேயான ஆழமான நட்பை குறிக்கிறது என்றும் ஏர் பஸ் விமானங்களை வழங்குவதின் மூலம் உலகிலேயே சிறந்த மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு அர்பபணிக்க தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, ஏர்பஸ்-ஏர் இந்தியா இடையிலான ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது எனவும், இது இந்தியா-பிரான்ஸ் இடையேயான நல்லுறவை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

France president hopes India can solve Russia ukraine war


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->