ஐந்து லட்சம் வெளிநாட்டவர்களுக்கு இலவச விசா! மத்திய அரசு முடிவு.!
Free visa for tourists
ஐந்து லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் சரவதேச விமான சேவை தற்போது முழு அளவில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இலவச விசாக்களை வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலவச விசாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை மீட்கும் நோக்கில் விசா சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 170 நாடுகளில் மீண்டும் இ-விசா வழங்குவது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விசா பெறுவதற்காக இந்திய தூதரகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டவர்கள் ஐந்து லட்சம் பேருக்கு இலவச விசா வழங்கப்பட இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.