பிரான்ஸ் அரசு கவிழ்வு: 60 ஆண்டுகளில் முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
French coup First no confidence motion wins in 60 years
பாரிஸ்: பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அவரது அரசு கவிந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 577 உறுப்பினர்கள் உள்ள நிலையில், 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்-மந்திரி பார்னியர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்குக் காரணமாக, சமூகப் பாதுகாப்பு நிதி மசோதா குறித்த சர்ச்சைகள் அடையாளமாக காணப்படுகிறது.பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்த மசோதாவை சிறப்பு அதிகாரம் பயன்படுத்தி நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்ற முயன்றது அரசுக்கு எதிராக பலத்தை உருவாக்கியது. இதற்கு எதிர்ப்பாக எதிர்க்கட்சிகள் மட்டும் அல்லாமல், மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பிரதமர் பார்னியரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அதிபர் மேக்ரானை பதவி விலகக்கோரி அழுத்தம் கொடுத்து வருகின்றன.
நாடாளுமன்றத்தில் ஆளும் அணிக்கு பெரும்பான்மையின்மை ஏற்பட்டதால், புதிய அரசை அமைக்க மோசமான சூழல் நிலவுகிறது.பிரான்ஸ் அரசின் கவிழ்வுக்கான இதுபோன்ற நிலைமை கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
பிரான்ஸ் அரசியல் நிலைமை தற்போது மோசமாக உள்ளதால், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் எதுவாக இருக்கும் என்பது பொது மக்களாலும் சர்வதேச நாட்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
French coup First no confidence motion wins in 60 years