பிரிட்டன் மீதான ரஷ்யாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - பிரான்ஸ் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகளுக்கு மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் வழங்கி உதவி வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரைன் படைகளால் ட்ரோன்கள் மூலம் கிரீமியாவில் உள்ள நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்கள் மற்றும் ரஷ்ய கடற்படைக் கப்பல்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் நார்ட் ஸ்ட்ரீம் குழாய் 1 மற்றும் 2 சேதமடைந்துள்ளன.

இதையடுத்து இந்த ட்ரோன் தாக்குதலுக்கு பிரிட்டன் ராணுவம் உதவியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் பிரிட்டன் மீதான ரஷ்யாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுகள் உக்ரைன் மீது ரஷ்யாவால் நடத்தப்படும் தாக்குதலை மறைக்க திசை திருப்பும் முயற்சி என்று பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சகத்தின் துணை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

French foreign ministry says accusations against Britain are baseless


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->