போரில் ரஷ்யா வெற்றி பெற முடியாது.! பிரான்ஸ் அதிபர்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற முடியாது என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போரில் உக்ரைன் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு பெர்லினில் தொடங்கியது.

இந்த மாநாட்டில் ரஷ்யாவுக்கு எதிராக அதிகமான பொருளாதார தடைகளை விதிக்கவும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதியை தடைசெய்ய ஜி7 நாடுகள் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில் மாநாட்டின் நிறைவில், ஜி-7 நாடுகள் உக்ரைனுக்கு இறுதிவரை ஆதரவளிக்கும் மற்றும் ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தேவைப்படும் வரை மற்றும் தேவையான தீவிரத்துடன் பராமரிக்க உறுதியளித்துள்ளன.

மேலும் உக்ரைன் போரில் ரஷியாவால் வெற்றி பெற முடியாது, வெற்றி பெறக்கூடாது என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

French President said Russia can not win the war in Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->