#சிங்கப்பூர் | கஞ்சா கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்!
Ganja smuggler sentenced to death Singapore court order
சிங்கப்பூர் சமூக நல பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, போதை பொருட்கள் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தண்டனைகளை வழங்கி வருகிறது.
இதனால் ஐ.நா.வின் மனித உரிமை கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சரிதேவி டிஜமானி என்ற பெண் 30 கிராம் ஹெராயினை கடந்த 2018 கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டார்.
இதனால் சிங்கப்பூர் அரசு இந்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்ததில் இன்று அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து அசில் என்ற சிறுவன் இந்த வார தொடக்கத்தில் 50 கிராம் ஹெராயினை கடத்தியதற்காக சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றியது.
இந்த வாரத்தில் மட்டும் சிங்கப்பூரில் இரண்டு நபர் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு முன்னதாக ஒரு கிலோ கஞ்சா கடத்தப்படுவதற்கு உதவி செய்த தமிழ்நாட்டை சேர்ந்த தங்கராஜ் சுப்பையா (வயது 46) என்பவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளி தங்கராஜுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மேல்முறையீட்டு வழக்குகளில் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேலும் சுப்பையாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை குறித்து உலகம் முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது. சிங்கப்பூரில் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்துபவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை அலுவலர்கள் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ganja smuggler sentenced to death Singapore court order