உக்ரைனுக்கு பழைய லெப்பா்ட்-1 ரக பீரங்கிகள் விற்பனை - ஜெர்மனி ஒப்புதல்
Germany decides to sell Leopard I tanks to Ukraine
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இப்போரில் ரஷ்ய தாக்குதலை எதிர்த்துப் போரிட மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகின்றன. இதில் கடந்த வாரம் ஜெர்மனி சக்தி வாய்ந்த லெப்பா்ட்-2 வகையை சோ்ந்த 14 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தது.
இந்நிலையில் ஜெர்மனி தங்களிடமுள்ள முந்தைய தலைமுறையைச் சோ்ந்த பழைய லெப்பா்ட்-1 ரக பீரங்கிகளை உக்ரைனுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பீரங்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான உரிமத்தை ஜெர்மனி அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 10 கோடி யூரோ அதாவது 891 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் 88 லெப்பா்ட்-1 ரக பீரங்கிகளை விற்பனை செய்ய ஜெர்மனி முடிவு செய்துள்ளது. மேலும் தொழிற்சாலை கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் பீரங்கிகளை பழுது பார்த்து சரி செய்த பிறகே உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.
ஆனால் லெப்பா்ட்-1 ரக பீரங்கிகளில் உபயோகப்படுத்தப்படும் 105 மி.மீ குண்டுகளை பெறுவதில் பிரச்சனை இருப்பதாக உக்ரைனின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Germany decides to sell Leopard I tanks to Ukraine