உக்ரைனுக்கு போர் விமானங்கள் அளிப்பது வரம்பு மீறிய செயல் - ஜெர்மனி - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் ரஷ்ய தாக்குதலை சமாளிக்க அதிநவீன எஃப்-17 போர் விமானங்களை வழங்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு அமெரிக்கா எஃப்-17 ரக விமானங்களை அனுப்ப முடியாது என்று அறிவித்த நிலையில், தற்போது ஜெர்மனியும் அதே மாதிரியான கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஜொ்மனி துணைப் பிரதமா் ராபா்ட் ஹாபேக் கூறும்பொழுது, ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் அவசியம் தான். ஆனால் ஐரோப்பிய நாடுகள் போர் விமானங்கள் வழங்குவது வரம்பு மீறிய செயல் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாதிரியான செயல் தங்கள் நாட்டையும் போரில் இழுத்து விடுவதற்கான அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் போரிட உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த லெப்பா்ட்-2 பீரங்கிகளை வழங்குவது சரியான நடவடிக்கையே என்றும், பீரங்கிகளுக்கும், போர் விமானங்களுக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜொ்மனிக்கான உக்ரைன் தூதா் ஒலெக்ஸி மகீவ், ஜெர்மனியிடம் போர் விமானங்களை அனுப்புமாறு உக்ரைன் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Germany says Supplying aircrafts to Ukraine is out of bounds


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->