உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாணவர்கள்..!!
global warming issue Africa students create awareness
உலகம் முழுவதும் இன்று சர்வதேச இளைஞர்கள் தினமானது கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை நெறிப்படுத்தி., நல்ல ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்துவதற்கும்., சிறந்த எதிர்காலத்தினை வழிகாட்டுவதற்கும்., தொடர்ந்து இளைஞர்களுக்கு ஊக்கப்படுத்துவதற்கும்., கவுரவிப்பதற்கும் இந்நாள் முக்கிய நாளாக அமைகிறது.
இந்த தினத்தன்று ஐ.நா அமைப்பானது இளைஞர்களின் மூலமாக பருவநிலை மாற்றத்தினை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தொடர் பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி தென்னாபிரிக்க நாட்டில் உள்ள பள்ளிகள் மூலமாக ஐநா வளர்ச்சி திட்ட குழுவின் ஆதரவுடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுமக்களுக்கு சுற்றுசூழல் மற்றும் பருவ நிலையின் தற்போதைய மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்., இந்த முயற்சிக்கான ஒரு பகுதியாக மாணவர்களை சுற்றுசூழல் வீரர்களாக நியமித்து சமூக பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இதற்கான பயிற்சியும் தொடர்ந்து அளித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் குப்பைகளை சுத்தம் செய்யும் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு., தங்களின் பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள சுமார் 1000-ற்கும் மேற்பட்ட இடத்தில் உள்ள சட்டவிரோதமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தொடர்ந்து அகற்றியுள்ளனர். இன்னும் சில மாணவர்கள் விவசாய கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி., பருவநிலை மாற்றத்தின் விளைவாக சுற்றுசூழல் மாசுபாடுகள் இருக்கும் விவசாய நிலத்தினை மேம்படுத்துவது குறித்து கற்றுக்கொள்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு
9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்
TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...
English Summary
global warming issue Africa students create awareness