தலையை அசைத்து உயிர் தப்பினேன்! கடவுள் எனது பக்கம் உள்ளார் - டிரம்ப்! - Seithipunal
Seithipunal


கடவுள் எனது பக்கம் உள்ளார் துப்பாக்கி சூடு தாக்குதலில் உயிர் தப்பியது குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டிரம்ப் களமிறங்கி உள்ளார்.

பென்சில்வேனியாவில் டிரம்ப் கடந்த வாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அப்போது மர்மநபர் ஒருவர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தினார் . அதில் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். ட்ரம்புக்கு அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பாக டிரம்ப்பை சம்பவத்தில் இடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் இது குறித்து நேற்று நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினர் இடையே மனம் திறந்து பேசியதாவது, இன்னும் நான்கு மாதத்தில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற போகிறோம். நான் முழு அமெரிக்காவுக்கும் அதிபர் பாதி அமெரிக்காவுக்கு மட்டுமல்ல என்று தெரிவித்தார்.

துப்பாக்கி சூடு குறித்து மனம் திறந்து பேசிய டிரம்ப், எல்லா இடங்களிலும் ரத்தம் சிந்தி கொண்டிருந்தது. இருந்த போதிலும் நான் பாதுகாப்பாகவே உணர்ந்தேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார். கடைசி நொடியில் நான் எனது தலையை அசைக்காமல் இருந்திருந்தால் துப்பாக்கி தோட்டா எனது நெற்றியில் பாய்ந்து இருக்கும். இன்று நான் உங்கள் முன்னால் இருந்து இருக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

God is on my side Former US President Trump on shooting survivor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->