இலங்கையில் உச்சத்தில் தங்கத்தின் விலை! மேலும் அதிகரிக்கும் என தகவல்.!
Gold rate hike in srilanka
இலங்கையில் இரு சவரன் தங்கம் 1 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 1லட்சத்து 69 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் அந்நாட்டில் தங்கத்தின் விலை 6.84 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலையேற்றம் இன்னும் அதிகரிக்கும் என்றே தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
Gold rate hike in srilanka