இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புவதாக பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ஷபாஷ் ஷெரீப்புக்கு பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷபாஷ் செரீப், பாகிஸ்தான், இந்தியாவுடன் சிறந்த உறவை விரும்புகிறது என்று தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை விரும்புவதாகவும், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது இன்றியமையாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் தியாகங்கள் நன்கு அறியப்பட்டவை என்றும், அமைதியைப் பாதுகாத்து, நமது மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவோம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Good relationship with India says Pakistan Prime minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->