சர்வதேச மகளிர் தினம்.. சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்.

மார்ச் 8ம் தேதி ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

இந்த நாள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதங்களில் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அன்றைய தினம் பெண்களுக்கு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில் பிரபல இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம், தனது டூடுல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது. 

அந்த வகையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் பெண்கள் பல்வேறு கலாசாரத்தை கடைபிடிப்பதை குறிப்பிடும் வகையில் இந்த டூடுல் அமைந்துள்ளது. ஆசிரியர், மருத்துவம், விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பெண்களை குறிக்கும் வகையிலான காட்சிகளும் இந்த டூடுலில் இடம்பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Google special doodle for womens day


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->