இதை மட்டும் பண்ணாதீங்க 'கூகுள் பே' பயனர்களுக்கு கூகுளின் எச்சரிக்கை!  - Seithipunal
Seithipunal


கூகுள் நிறுவனம், கூகுள் பே செயலியை பயன்படுத்தும் போது திரை பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. 

கூகுள் பே செயலி உலகில் மிகப் பிரபலமான ஆன்லைன் பணபரிவர்த்தனை செயல்களில் ஒன்றாக உள்ளது. கூகுள் பே பயன்படுத்துபவர்களுக்கு கூகுள் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கூகுள் பே செயலியில் சந்தேகமளிக்கும் பணபரிவர்த்தனைகளைக் கண்டறிவதற்காக கூகுளின் சிறந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பம் பயன்படுகிறது. 

மேலும் கூடுதல் பாதுகாப்புடன் பண பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காக கூகுள் நிறுவனம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கூகுள் பே செயலியில் பாதுகாப்பான பணபரிவர்த்தனைகளுக்கு சில செயலிகள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக மொபைல் போன், கணினி, லேப்டாப் என எந்த ஒரு சாதனத்திலும் கூகுள் பே செயலி மூலம் பண பரிவர்த்தனை செய்யும் போது திரை பகிர்வு செயலிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

இது உங்களது சாதனத்தின் முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளும். உங்களது டெபிட் கார்ட், வங்கி கணக்கு தகவல்களையும் எடுத்துக் கொள்ளும்.

எனவே கூகுள் பே செயலி பயன்படுத்தும் போது ஸ்கிரீன் ஷாட், எனி டெக்ஸ் உள்ளிட்ட திரைப்பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் இது போன்ற செயல்கள் பயன்பாட்டில் இல்லாததை உறுதி செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது. 

இது போன்ற திரை பகிர்வு செயலிகளை பதிவிறக்கம் செய்யவும் பயன்படுத்தவும் கூகுள் செயல்களில் எந்த ஒரு எச்சரிக்கை அறிவிப்பும் வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google warning Google Pay users


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->