ஒரு நிமிடத்தில் 42 ஸ்குவாட்ஸ்.. கின்னஸ் சாதனை செய்து.. இந்திய வம்சாவளி பெண் அசத்தல்.!
Guinness record Indian women who took 42 squats in 1 minute
ஒரு நிமிடத்தில் 42 முறைகள் ஸ்குவாட்ஸ் எடுத்து இந்தியா வம்சாவளி பெண் கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கரன்ஜீத் கவுர் பெயிண்ட்ஸ் என்ற சீக்கிய பெண் இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகிறார். இவர் அதிக உடல் எடையுடன் எழுந்து உட்காரும் ஸ்குவாட்ஸ் என்று கூறப்படும் உடற்பயிற்சியில் உலக சாதனை செய்து இருக்கிறார்.
பெயின்ஸ்க்கு 25 வயதாகும் நிலையில், அவர் ஒரு நிமிடத்தில் 42 முறை குவாட்ஸ் செய்து உலக சாதனை செய்துள்ளார். தனது சொந்த உடல் எடையில் அந்தப் பெண் பெண்களுக்கான பிரிவில் இந்த ஸ்குவாட்ஸை செய்திருக்கிறார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் அவர் கின்னஸ் சாதனை செய்திருக்கிறார்.
English Summary
Guinness record Indian women who took 42 squats in 1 minute