நாங்கள் பழங்குடியினரின் பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கிறோம் - பிரதமர் மோடி பேச்சு..! - Seithipunal
Seithipunal


நேற்று குஜராத் மாநிலம் தபி மற்றும் வியாரா பகுதியில் ரூ.1970 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் அவர் மக்களுக்கு தெருவொத்ததாவது,

"உங்களின் வளர்ச்சிக்கு நான் முழு மனதோடு முயற்சி செய்வேன். அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், தபி, நர்மதா உள்ளிட்ட ஒட்டுமொத்த பழங்குடி மக்கள் பகுதி மேம்பாட்டோடு தொடர்புடையவை. 

இதைத்தொடர்ந்து, பழங்குடி மக்கள் நலன், பழங்குடி சமூகத்தினர் நல்வாழ்வு என்று இரண்டு வகையான கொள்கைகளை நம் நாடு கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பழங்குடி மக்களின் நலன் பற்றி கவலைப்படாத கட்சிகளும் உள்ளன. 

ஆனால், பாஜக போன்ற கட்சி பழங்குடியினரின் நல்வாழ்வுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. நாங்கள் பழங்குடியினரின் பாரம்பரியங்களுக்கு மதிப்பளிக்கிறோம். 

இதையடுத்து, பழங்குடி சமூகங்களின் நல்வாழ்வு எங்களின் உயர் முன்னுரிமையாக இருக்கிறது. நாங்கள் எந்த பகுதியில் அரசமைத்தாலும் பழங்குடியினர் நல்வாழ்வுக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறோம். 

கடந்த 7-8 ஆண்டுகளில் பழங்குடியினர் நலனுக்கான பட்ஜெட் மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அனைவரின் முயற்சியுடன் வளர்ச்சியடைந்த குஜராத்தை மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நாம் கட்டமைப்போம்" என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gujarat foundation stone function prime minister modi speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->