தொடர் கனமழையால் ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு.! 31 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பர்வான் மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கனமழை காரணமாக பர்வான், கபிசா மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

மேலும் சாலைகள், வயல்வெளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, ஒரு சில கிராமங்களில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கில் இதுவரை சிக்கி 31 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணக் குழுக்கள் மற்றும் அவசர உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களை மீட்பு படையினர் தேடி வருவதாகவும், மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹெக்மத்துல்லா ஷமிம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain lashes out in Afghanistan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->