உலகை உலுக்கும் ஹிஸ்புல்லா தலைவர் மரணம்!....ஈரான் தலைவர் பாதுகாப்பான இடத்திற்கு தப்பியோட்டம்! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையிடையே யாரும் எதிர்பாராத வகையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என கருதப்பட்டது.

தொடர்ந்து நேற்று முன்தினம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் ஹசன் நஸ்ரல்லா  இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஹசன் நஸ்ரல்லா மறைவுக்கு 5 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படும் என ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அறிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து இஸ்ரேலின் பார்வை ஈரான் மீது பக்கம் திரும்பியிருப்பதாகவும், இதன் காரணமாக ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hezbollah leader who shakes the world is dead iran leader escapes to a safe place


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->