ஷாங்காய்! உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு.!
High school and College entrance exam postponed in shanghai
ஷாங்காயில் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சீனா ஷாங்காயில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு ஒரு மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் உயர்நிலைப்பள்ளி நுழைவுத் தேர்வும், ஜூலை 7 முதல் 9 ஆம் தேதி வரை கல்லூரி நுழைவுத் தேர்வும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
English Summary
High school and College entrance exam postponed in shanghai