ஹிஜாப் போராட்டம் : அடுத்தடுத்து நிகழும் கொடூர சம்பவம்..!
hijap strike women died
ஈரான் நாட்டில் பெண்கள் புர்கா அணிவது கட்டாயமான நிலையில், இதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரியாக புர்கா அணியவில்லை என்று மாஷா அமினி என்ற 22 வயது பெண் போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் போலீசார் விசாரணையின் போது திடீரென உயிரிழந்தார்.
அவர் மாரடைப்பால் உயிர் இழந்ததாக போலீசார் தெரிவித்த நிலையில், அவர் போலீசார் தாக்கியதால் தான் இறந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனால், ஈரான் முழுவதும் பெண்கள் மற்றும் பொது மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஹிஜாப் உடைகளை தீ வைத்து எரித்தனர்.
இப்போராட்டத்தை தடுப்பதற்கு அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த போராட்டத்தில், போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இது வரை 40 பேர் வரை பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஈரான் நாட்டில் உள்ள கராஜ் நகரில் நடந்த போராட்டத்தில், பாதுகாப்பு படை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஹதிஷ் நஜிபி என்ற 20 வயது இளம்பெண் பலியானார். போலீசார் துப்பக்கியால் சுட்டதில் அவரது முகம், நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் குண்டு பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதன் காரணமாக, ஈரானில் மேலும் பதட்டமான சூழ்நிலை உருவாகியதில், ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கனடா உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.