செங்கடலில் "அமெரிக்க போர் கப்பல்கள்" மீது தாக்குதல்.. பதற்றத்தில் அலரும் உலக நாடுகள்.!! - Seithipunal
Seithipunal


ஏமனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பினர் 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் 2 வணிக கப்பல்கள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது இந்திய பெருங்கடலில் போர் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

இது தொடர்பாக ஹவுதி இராணுவ செய்தி தொடர்பாளர் யாஹ்யா சிரியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் "செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ட்ரோன் மூலம் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளோம். 

அதேபோன்று செங்கடலில் சைக்லேடஸ் மண் என்ற வணிக கப்பலையும், இந்திய பெருங்கடலில் எம்எஸ்சி ஓரியன் என்ற வணிக கப்பலையும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளோம். 

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடரும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் நீடிக்கும்" என ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் இந்திய பெருங்கடல் ஒட்டிய செங்கடலில் போர் பதற்றம் நீடிப்பதால் உலக நாடுகள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Houthi Attack on us Navy ship in Indian Ocean


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->