கடும் பொருளாதார நெருக்கடி.! இலங்கைக்கு ரூ.24,000 கோடி கடன் - ஐ.எம்.எப் ஒப்புதல் - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு 24,000 கோடி ரூபாய் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு பொருளாதார உதவிகள் அளித்து வருகின்றன. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம்(IMF) இலங்கை கடனுதவி கேட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, கடன் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,000 கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இலங்கைக்கு முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என்றும், 2027-ஆம் ஆண்டு வரை பல தவணைகளாக கடன் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMF Agrees to Provide Rs 24000 Crore Loan to srilanka for economic crisis


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->