உக்ரைனுக்கு 15.6 பில்லியன் டாலர் கடன்... சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்..!
IMF approves 15 point 6 billion dollar loan to Ukraine
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வணிகங்கள் முற்றிலும் தடைபட்டதால் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மேற்கத்திய நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் உக்ரைனுக்கு உதவி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவின் படையெடுப்பால் உருக்குலைந்த பொருளாதாரத்தை சீரமைக்கவும், சேதமடைந்த உக்ரைன் நகரங்களை புரனமைக்கவும் மற்றும் நிவாரண பணிகளுக்காகவும் உக்ரைனுக்கு 15.6 பில்லியன் டாலர் கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நீதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுத்தொடர்பாக நாணய நிதியம் வெளியிட்ட தகவலில், இந்த கடனானது 4 ஆண்டுகளுக்கு வெவ்வேறு தவணையாக வழங்கப்படும் என்றும், உலக நாடுகள் சார்பில் வழங்கவிற்கும் 115 பில்லியன் டாலர் கடன் தொகுப்பில் இது ஒரு பகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது..மேலும் முதல் தவணையாக 2.7 பில்லியன் டாலர் உக்ரைனுக்கு உடனடியாக வழங்கப்படும் எனவும், உணவு மற்றும் எரிசக்தி துறையை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன் பேசும் பொழுது, நாணய நிதியத்தின் இந்த நிதி உதவி பொருளாதாரம் மற்றும் நிதியின் நிலைத்தன்மையை பாதுகாக்கும். நீண்ட கால புனரமைப்புக்கான அடித்தளத்தை அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
IMF approves 15 point 6 billion dollar loan to Ukraine