இந்தோனேசியா நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 310 ஆக உயர்வு.!
indhonesiya earthquake three hundrad and ten peoples died
இந்தோனேசியா மேற்கு ஜாவா தீவில் சியாஞ்சூர் நகரில் கடந்த திங்கட்கிழமை மிகப்பெரிய நின்டுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இதனால், வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கத்தில் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
அதன் படி, கடந்த புதன் கிழமை காலை மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதனால், பலி எண்ணிக்கை 252 ஆக உயர்ந்தது. இதன்பின் மீட்பு பனி மேலும் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் பலர் குழந்தைகள். மேலும் 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இந்நிலையில், நிலநடுக்க பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்றது.
அதன் பின்னர், உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்து உள்ளது. இதில் மேலும், 24 பேரை காணவில்லை என்று அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக மேஜர் ஜெனரல் சுஹர்யான்தோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், "நிலநடுக்கத்திற்கு பலியானவர்களில் 3-ல் ஒரு பங்கினர் குழந்தைகள். 2,043 பேர் காயமடைந்து உள்ளனர். 61,800 பேர் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றுத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தில், 56,320 வீடுகள், 31 பள்ளிகள், 124 வழிபாட்டு தலங்கள் மற்றும் மூன்று சுகாதார வசதி மையங்கள் என்று பல கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. இந்நிலையில், இந்த நிலநடுக்க பகுதிகளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிபர் ஜோகோ விடோடோ நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு அவர் பேசியதாவது, "வீடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையும், நிலநடுக்கம் பாதிப்பை எதிர்கொள்ளும்படியான வீடுகள் மீண்டும் கட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
English Summary
indhonesiya earthquake three hundrad and ten peoples died