உக்ரைன் மாகாணங்கள் இணைப்பு - ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா மற்றும் சீனா.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் 7 மாதங்களாக நடந்து வரும் நிலையில், உக்ரைனிடமிருந்து லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா மாகாணங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது.

இதையடுத்து இந்த நான்கு மாகாணங்களை ரஷ்யவுடன் இணைப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பெரும்பாலான மக்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் உக்ரைனில் கைப்பற்றிய 4 மாகாணங்களையும் அதிகாரபூர்வமாக 'ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பகுதிகள்' என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். இதன் மூலம் உக்ரைன் நாட்டின் 15% பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதாக அறிவித்தது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்தர்.

இதையடுத்து ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் ரஷியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், உக்ரைனின் எல்லைகளில் ரஷ்யாவால் கொண்டுவரப்பட எந்த ஒரு மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது என்றும், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், தீர்மானத்திற்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தன. ஆனால் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தன.

இதையடுத்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற ரஷ்யா தடை கொண்டு வந்தால், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா பொதுச் சபையில் உலக நாடுகள் பங்கேற்று வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India and China boycott voting against Russia in province annexation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->