கிரே பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம்.!
India Condemns Pakistan Exemption From Grey List
பாரிசை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின்( FATF ) தீவிரவாத நிதி கண்காணிப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நான்கு வருடங்களுக்கு முன்பாக தீவிரவாத இயக்கத்திற்கு நிதி அளித்ததன் குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானை கிரே பட்டியலில் சேர்க்கப்பட்டு, பொருளாதார கட்டுப்பாடுகள் வீத்ததற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத இயக்கங்கள் மீது அண்மையில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் மீதுள்ள அனைத்து பொருளாதார தடைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டதாக பாரிசில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நடவடிக்கை பணிக்குழுவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தீவிரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் வெளிப்படையாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
India Condemns Pakistan Exemption From Grey List