ஐ. நா.வில் மனிதநேயம் சார்ந்த உதவிகளுக்கு விலக்கு அளிக்கும் தீர்மானத்தை இந்திய புறக்கணித்ததற்கான காரணம் என்ன?  - Seithipunal
Seithipunal


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து நாடுகள் வரைவு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. இந்த தீர்மானம், மனிதநேயம் சார்ந்த உதவிகளுக்கான முயற்சிகளுக்கு தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் இருந்தது. 

இதற்கு, 14 உறுப்பு நாடுகளும் ஆதரவாக வாக்களித்த நிலையில், இந்தியா மட்டும் அதனை புறக்கணித்துள்ளது. இருப்பினும் இந்த தீர்மானத்திற்கு அதிக பெரும்பான்மை உள்ளதால், நடைமுறைக்கு ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தப் புறக்கணிப்புக் குறித்து, ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதியான ருசிரா கம்போஜ் தெரிவித்ததாவது, "சில பயங்கரவாத குழுக்கள் மனிதநேயம் என்ற பெயரிலான வாய்ப்பினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, நிரூபிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் எங்களுடைய இந்த முடிவு வெளிப்பட்டுள்ளது. 

எங்களுடைய அண்டை நாடுகளில், தடைகளில் இருந்து தப்பிப்பதற்கு மனிதநேய அமைப்புகள் என்று தங்களை உருவகப்படுத்தி கொண்டு பல்வேறு பயங்கரவாத குழுக்களின் சார்பில் நடைபெற்ற சம்பவங்களும் உள்ளன. இதனை சர்வதேச சமூகமும் ஒப்பு கொண்டுள்ளது. 

இந்த குழுக்கள், மனிதநேய உதவி என்ற பெயரை பயன்படுத்தி, அதன் நிழலின் கீழ் நிதி சேர்ப்பதிலும், போராளிகளை பணியமர்த்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றன" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india ignore of the resolution to exempt humanitarian aid in un


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->