உலக பட்டினி குறியீடு.! ஆப்கானிஸ்தானைத் தவிர்த்தால் தெற்காசியாவில் மோசமான இடத்தில் உள்ள இந்தியா.!
India ranks 107th on the Global Hunger Index
உலக பட்டினி குறியீட்டில், 121 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்த ஆண்டு இந்தியா 107வது இடத்தில் உள்ளது.
உலக அளவில் பட்டினிக் குறியீட்டை ஆண்டு தோறும் ஆய்வு செய்து அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் என்ற நிறுவனமும் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
இதில் ஊட்டச்சத்து குறைபாடு, 5-வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளின் அடிப்படையில் இந்தப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இதில், 121 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 107வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு 106 நாடுகளில் 101வது இடத்திலும், 2020ம் ஆண்டில் 94வது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாகிஸ்தான் (99), இலங்கை (64) வங்கதேசம் (84), நேபாளம் (81), மியான்மர் (71) போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட இந்த குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன. ஆனால் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளில் போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மட்டுமே பட்டியலில் பின்தங்கி இருக்கிறது.
இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தானைத் தவிர்த்தால் தெற்காசியாவில் இந்தியாதான் மோசமான இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது 17.3 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், இ்ந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
India ranks 107th on the Global Hunger Index