ஐ.நா கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருக்க வேண்டும்!...இந்தியாவிற்கு ஆதரவு தரும் ரஷியா! - Seithipunal
Seithipunal


ஐக்கிய நாடுகள் சபையில் 200 நாடுகள் அங்கம் வகித்து வரும் நிலையில், பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. அதிலும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களாக 5 நாடுகள் மட்டுமே உள்ளன.

மேலும் 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும் தற்காலிக உறுப்பினர்களாக மற்ற 10 நாடுகள் உள்ள நிலையில், சர்வதேச அளவில் தற்போது மிகப்பெரிய பொருளதார நாடாக  இந்தியா வளர்ந்து வருகிறது.

இந்த சூழலில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றது. இந்த வரிசையில் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், ரஷிய அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் தெரிவித்துள்ளதாவது இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர அடிப்படையில் நீண்ட காலத்திற்கு உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்றும், உலக அளவில் பெரும்பான்மையாக உள்ளவர்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கான தனது ஆதரவை ரஷிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India should be a permanent member of the un council russia supports india


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->